போலீசார் ஆம்புலன்ஸ்சை தள்ளி, தள்ளி


Pasumai Nayagan www.thagavalthalam.com

எல்லாம் இப்படி ஆயிட்டா...!: 
சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே சில அமைப்பினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த அவசர ஆம்புலன்ஸ் சிக்கிக் தவித்து நின்றது. பின்னர் அதை மீண்டும் ஓட்ட ஆரம்பிக்கும் போது ஸ்டார்ட் ஆகாமல் நின்றுவிட்டது. இதையடுத்து ஆர்பாட்டத்துக்கு வந்த போலீசார் அந்த அவசர ஆம்புலன்ஸ்சை தள்ளி, தள்ளி ஸ்டார்ட் செய்ய பெரும்பாடு பட்டனர். அவசர ஆம்புலன் எல்லாம் இப்படி ஆயிட்டா...! 

போலீஸ்காரர்களே ஜாக்கிரதை..... ! எப்.ஐ.ஆர், பதிவு செய்ய மறுக்காதீங்க .!


www.thagavalthalam.com பசுமை நாயகன்


         நாடு முழுவதும் போலீசாருக்கு தலையில் குட்டு வைக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட் எப்.ஐ.ஆர், தொடர்பா ஒரு சிறப்பு யோசனையை வழங்கியிருக்கிறது. அத்துடன் இந்த உத்தரவை பின்பற்றாத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் இன்று கூறியுள்ளனர்.

     உத்திரபிரதேச மாநிலத்தல் தனது மகள் கடத்தப்பட்டது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தது தொடர்பாகவும் , இதில் சரியான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்ற விஷயத்தை வலியுறுத்தியும் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது; 

     ஒரு குற்றப்புகாரில் வெளிப்படையான , தெரியும் அளவிற்கு குற்றம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தாலே உடனே எப்.ஐ.ஆர்.,( முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்ய வேண்டும். இது மிக அவசியமானதும் கூட. இதனை தவிர்க்க கூடாது. மேலும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் முன்பாக போலீசார் விசாரணை என்ற கட்டம் தேவையற்றது. அது போல் எப்.ஐ.ஆர்., போடாமல் நடவடிக்கை எடுப்பதும் அவசியமில்லை.

     போலீசாரின் முதல்கட்ட ஆய்வும் 7 நாட்களுக்குள் இருக்க வேண்டும். தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் அடிப்படையில் நடவடிக்கை என்பதை விட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கலாம். எப்.ஐ.ஆர்., போட மறுக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.


இது ஏற்று கொள்ளக்கூடியது :



       திருமண பந்த பிரச்னை, ஊழல், நிதி முறைகேடு, நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் முதல்கட்ட விசாரணை மிக முக்கியத்துவமாக இருக்க வேண்டும். இது ஏற்று கொள்ளக்கூடியது. எப்.ஐ.ஆர், பதிவேட்டில் காட்டப்பட்டு அதற்கான நகல்கள் புகாரர்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். புகாரில் ஆதாரங்கள் இருந்தால் ஒழிய கைது நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். 
பசுமை நாயகன் Pasumai Nayagan

கட்டப்பஞ்சாயத்து இனி முடியாது :  தலைமை நீதிபதி சதாசிவம்     தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட ( அரசியல் சாசன பெஞ்ச் ) இந்த சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு முக்கியத்தும் வாய்ந்ததாகும். குறிப்பாக பல போலீஸ் ஸ்டேஷன்களில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுப்பது, எப்.ஐ.ஆர்., போட்டும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது, காவல் நிலையங்களிலேய பேசி தீர்க்கும் கட்டப்பஞ்சாயத்து இனி நடத்த முடியாது.

குற்றவாளிகளை பிடித்த காவலர்களுக்கு பதவிஉயர்வு தலா 5 லட்சம் ரூபாய்


Pasumai Nayagan www.thagavalthalam.com

        ந்து முன்னணி பிரமுகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
     இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு தங்களது உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றிய காவலர் முதல் கூடுதல் கண்காணிப்பாளர் வரையிலான 20 பேருக்கும் ஒரு படி பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தலைமறைவான குற்றவாளிகளை பிடிப்பதற்கு தீட்டப்பட்ட செயல்முறை திட்டத்தில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் வகையில், அனைவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
         குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு காயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் லட்சுமணனின் துணிச்சலைப் பாராட்டிய முதல்வர், அவருக்கு ரொக்கப் பணமாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அவரின் மருத்துவச் செலவு அனைத்தையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இந்து முன்னணி பிரமுகர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.








சினிமா போலீசும், நிஜ போலீசும் !

     எப்போதெல்லாம் காவல்துறையை மையப்படுத்தி முக்கிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவருகிறதோ, அப்போதெல்லாம், அந்த திரைப்படங்கள் காவல்துறையின் இமேஜை உயர்த்த உதவும் என்று சொல்லப்படுகிறது.
   அண்மையில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் சிங்கம் II படத்தில் காவல்துறை குறித்த பிம்பம் பலருக்கும் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
படத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் திருப்பங்கள்.
     கதாநாயகன், வேகத்தோடு, வெறியோடு, காதலோடு, சென்னையிலும், நெல்லையிலும் திடீர் திடீரென தோன்றி அசரவைப்பது - எந்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கட்டுப்படாமல், நேரடியாக உள்துறை அமைச்சர் கட்டுபாட்டில் செயல்படுவது - நினைத்த அடுத்த நிமிடத்தில், வெளிநாடுகளில் சண்டை போடுவது - இப்படி நடைமுறையில் எந்த விதத்திலும் ஒவ்வாத முறையில் காவல்துறையை சித்தரிப்பது எப்படி காவல்துறையின் இமேஜ் உயர உதவியது என்பது சந்தேகம் தான்.
   சினிமா படங்களில் மட்டும் ஹீரோக்களாக சித்தரிக்கப்படும் காவல்துறை அதிகாரிகள் நிஜத்தில் அப்படி யாரும் இல்லை. முக்கிய குற்றவாளியை பிடிக்க தமிழக எல்லையைத் தாண்டி பயணிக்க வேண்டிய சூழ்நிலையில், பயணத்திற்கு அனுமதி பெறுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும், கண்காணிப்பாளர் பதவிக்கு கீழ் உள்ளவர்கள் பெரும்பாலும் ரயிலில்தான் பயணிக்க வேண்டும். உதாரணத்திற்கு டெல்லி சென்று குற்றவாளியை கைது செய்ய வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 3 நாட்கள் ரயில் பயணத்திலேயே கழிந்துவிடும் என்கிறார்கள் காவல்துறையினர்.
   வெளிநாடு செல்வது, குற்ற வழக்கின் தேவையை பொருத்தது என்றாலும், அது சினிமாவில் காட்டப்படுவது போல் கண்டிப்பாக இல்லை. காவல்துறையின் இமேஜ் உயரவேண்டும் என்றால், திரையில் தோன்றும் போலீஸ் நாயகன், எந்த கணக்கும் இல்லாமல், துப்பாக்கியில் சுட்டு விளையாடலாம் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஏனென்றால், நிஜத்தில் மக்கள் நலன்சார்ந்து இயங்கிய, இயங்கிவரும் காவல்துறை அதிகாரிகள் மட்டுமே உண்மையான ஹீரோக்களாக இருக்கிறார்கள்.
   துப்பாக்கியை மட்டும் நம்பி காக்கிச்சட்டை அணியும் வெகு சில அதிகாரிகள், அவர்களின் என்கவுன்ட்டர்களால் பிரபலமாக இருக்கிறார்கள்.ஆனால், இவர்களால் ஒரு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை பதட்டமான சூழ்நிலையை சரியாக கையாளும் அதிகாரிகளால் மட்டுமே கலவரத்தை, மோதலை தவிர்க்க இயலுமே தவிர, துப்பாக்கியைக் கொண்டு சுடுபவரால் அல்ல.
   அதேபோல், காவல்நிலைய மட்டத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின்றன.  கொடுக்கப்படும் பெரும்பாலான புகார்கள் மீது உடனடியாக விசாரணை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் புகார்தாரர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. காவல்துறையின் மீது இருக்கும் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது காவல்துறையினரின் பணிப்பளுவும் அதிகரித்துவருகிறது.இந்த சூழ்நிலை தொடர்ந்தால் காவல்துறையின் செயல்பாடுகள் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.
   நவீனமயமாக்கல், அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதும் ஆகியவை காவல்துறையை மேம்படுத்த உடனடியாக எடுக்கவேண்டிய நடவடிக்கையாக இருக்கின்றன.
  கடந்த 2006 ஆம் ஆண்டில், நவீனமயமாக்கல் செய்யவும், ஆளும் கட்சியினர் பிடியிலிருந்து காவல் துறையை விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது ஆனால், இதை எந்த அரசுகளும் காதில் போட்டுக்கொள்ளவில்லை என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கடிந்துகொண்டிருக்கிறது.
ஆக,காவல்துறையினரின் இமேஜை உயர்த்த வெறும் திரைப்படங்கள் மட்டும் உதவுமா என்ன?
மகாலிங்கம் பொன்னுசாமி
- பசுமைநாயகன்








புகார் கொடுக்க வந்தவர்களை வேலை வாங்கிய போலீசார்


     தென்காசி அருகே போலி சாமியார் மீது புகார் கொடுக்க சென்றவர்களை காவல் நிலையத்தை சுத்தப்படுத்துமாறு கூறி மிரட்டியதாக போலீசார் மீது புகார் எழுந்துள்ளது.
      தென்காசியை அடுத்த அச்சங்குட்டம் கிராமத்தைச் சேர்ந்த கருமேனி ஆசாரி, குட்டி ஆகியோர், போலி சாமியார் ஒருவர் மீது மோசடி புகார் கொடுக்க சுரண்டை காவல் நிலையம் சென்றுள்ளனர். அப்போது, சாமியாரை கைது செய்யும் வரை, காவல் நிலையத்தை சுத்தப்படுத்துமாறும், வளாகத்தில் உள்ள புற்களை அகற்றுமாறும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
   இதனையடுத்து, புகார் கொடுக்க சென்றவர்கள் காவல்நிலைய வளாகத்தை சுத்தம் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுபோன்ற வேலகளை செய்யுமாறு காவல்துறையினர் தங்களை மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கூறினர்.

ஒரு கிரேட் சலியூ ட் சார்


     திருப்பூர் போக்குவரத்து காவல்துறையில் உதவி ஆய்வாளர் ராக பணி புரிகிறார் .ஒரு காவலர் எப்படி பணி புரிய வேண்டும் என்பதில் உதாரணமானவர் .கடுமையான முகம் காட்டி கொண்டு இருக்கும் காவலர்கள் மத்தியில் அன்பாய் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் போக்குவரத்து ஒழுங்கு பணியை செய்வார். எனக்கு தெரிந்து இவர் இருந்தால் இவர் அன்புக்கு கட்டு பட்டு வெள்ளை கோட்டிற்கு அப்பால் நிற்பவர்கள் கூட வெள்ளை கோட்டிற்குள் வாகனத்தை நிறுத்துவார்கள் 


அன்பாய் அனைவரையும் கண்டிப்பார் . கையூ ட்டு வாங்காத அன்பான போலிஸ் காரர் உண்மையை சொல்ல வேண்டுமானால் ஒரு உண்மையானமனிதர் இவர் .

இவரை போல் தமிழக காவல்துறையில் காவலர்கள் இருந்தால் காவல் துறையே கவுரவம் நிறைந்ததாக மாறிவிடும்.

 கருப்பையா சார் உங்களுக்கு பசுமை நாயகன் சார்பாக 
 ஒரு கிரேட் சலியூட் சார்
  
                                                                                   -பசுமை நாயகன்